திருச்சியில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை இறப்பு.அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மதுராபுரி நரிக்குறவர் காலணி பகுதியை சேர்ந்தவர் வல்லரசு. இவரது மனைவி ஜோதிகா.

இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஜோதிகாவுக்கு கடந்த 17ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது,கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாயும் சேயும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று அக்குழந்தைக்கு மூக்கடைப்பு ஏற்பட்டது. உடனே ஜோதிகா குழந்தையை எடுத்துக்கொண்டு ஜம்புநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட வீரமச்சம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர், அங்கு பணியில் இருந்த டாக்டர் மூக்கு வழியாக செலுத்தப்படும் ஒரு சொட்டு மருந்தை எழுதிக் கொடுத்து மேலும் அந்த மருந்து தங்களிடம் இருப்பு இல்லை. வெளியே வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது,பின்னர் மெடிக்கல் ஸ்டோரில் டாக்டர் எழுதியக்கொடுத்த சொட்டு மருந்தை வாங்கிக்கொண்டு ஜோதிகா வீடு திரும்பினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தை மூக்கடைப்பினால் தூங்காமல் முனகிக் கொண்டே இருந்தாராம்,

உடனே ஜோதிகா அந்த சொட்டு மருந்தை மூக்கு வழியாக செலுத்தியுள்ளார், பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தை எந்த அசைவும் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்,டாக்டர் எழுதிக் கொடுத்த சொட்டு மருந்தே தங்களது குழந்தையின் இறப்புக்கு காரணம் என பெற்றோர்

குழந்தையின் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை என்பதால் உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், குழந்தை பிறந்து 13 நாட்களே ஆன நிலையில் மூக்கிற்கு சொட்டு மருந்து இட்டதால் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments