தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்
அனுப்புநர்:
பொறிஞர்.S.செந்தாமரை B.E.,M.C.A.,M.I.E.,
மேற்பார்வை பொறியாளர்,
திருச்சி மின்பகிர்மான வட்டம்,
பெருநகரம்/திருச்சி – 20.
பெறுநர்:
ஆசிரியர் அவர்கள்,
அனைத்து தமிழ் மற்றும்
ஆங்கிலம் நாளிதழ்கள்.

க.எண்.மே.பொ/திமிபவ/பெரு/திமி.செ.பொ/விநி/உ.மி.பொ/ஊ.மி.க/தொ.நு.உ/கோ.பத்திரி/அ.எண்:123/2026,நாள்:30.06.2026
அய்யா,
பொருள்:- மின்சாரம் – திருச்சி மின்பகிர்மான வட்டம் / பெருநகரம் / திருச்சி – அலுவலகங்களில் மேற்பார்வை பொறியாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஜூலை – 2026 ஆம் மாதம் நடைபெறு தொடர்பான செய்தியினை தங்களது பத்திரிக்கைகளில் வெளியிடக்கோருவது – தொடர்பாக.

பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் நலன் கருதி கீழ்க்கண்ட செய்தியினை தங்கள் நாளிதழில் வெளியிட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
“செய்திக்குறிப்பு”
மேற்பார்வை பொறியாளர், திருச்சி மின்பகிர்மான வட்டம், பெருநகரம் / திருச்சி அவர்களால் பெருநகரம்/திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் ஜூலை – 2026 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

(1) திருச்சி கிழக்கு கோட்டம் – 03.07.2026 ( முதல் வெள்ளிக்கிழமை. )
(2) துறையூர் கோட்டம் – 07.07.2026 ( முதல் செவ்வாய்கிழமை. )
(3) திருவரங்கம் கோட்டம் – 10.07.2026 ( இரண்டாம் வெள்ளிக்கிழமை. )
(4) இலால்குடி கோட்டம் – 14.07.2026 ( இரண்டாம் செவ்வாய்கிழமை. )
(5) திருச்சி நகரிய கோட்டம் – 21.07.2026 ( மூன்றாம் செவ்வாய்கிழமை. )
(6) முசிறி கோட்டம் – 24.07.2026 ( நான்காம் வெள்ளிக்கிழமை. )
(7) மணப்பாறை கோட்டம் – 28.07.2026 ( நான்காம் செவ்வாய்கிழமை. )
எனவே வரும் ஜூலை – 2026 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்டவாறு நடக்க உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றது.

தங்கள் உண்மையுள்ள,
மேற்பார்வை பொறியாளர்
திமிபவ/பெருநகரம்/திருச்சி.
நகல்:- தலைமைப் பொறியாளர்/பகிர்மானம்/திருச்சி மண்டலம்/திருச்சி
தகவலுக்காக சமர்ப்பிக்கப்படுகின்றது.
நகல்:- அனைத்து செயற் பொறியாளர்கள்/திருச்சி பெருநகர வட்டம்
தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் மின்னஞ்சல் வாயிலாக மட்டும் அனுப்பப்படுகின்றது.
E:\TA-2026 – 27\SE Monthly Greivance Meeting\3.JULY – 2026\July http://2026.doc

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments