திருச்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து தமுமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் இஸ்லாத்தை தழுவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்ற சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு கடந்த 2024 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை முறைகேடாக ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்லாத்தை தழுவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்ற சான்றிதழ் வழங்க கூடாத என தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேட்டி : நூர்தீன் – தலைமை பிரதிநிதி,
தமுமுக.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments