திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளைக் கடந்தும் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி ஊராட்சியில் உள்ள குண்டுகள் கிராமத்தில், சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், 2022–23 ஆம் நிதியாண்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 14.50 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால், கட்டி முடிக்கப்பட்டு 4ஆண்டுகள் ஆகியும் நீண்ட காலமாகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், மக்கள் வரிப்பணம் விரயம் ஆவதோடு தங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அருகிலுள்ள கிணற்றில் சென்று பொதுமக்கள் குடிநீர் எடுத்து வரும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் தங்களால் குழந்தைகளை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்றும் ஆண்கள் வேலைக்கு செல்லவும் முடியவில்லை எனவும் கூறி வருகின்றனர்

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, குண்டுகள் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments