தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திருவெறும்பூர் அனைத்து பகுதி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி படி அனைத்து விவசாயிகளின் பயிர் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து வட்டாட்சியரிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தவெக தங்களது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சி அமைத்தால் ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் ஐந்து ஏக்கருக்கு மேலாக நிலம் வைத்து உள்ள விவசாய கடன் பெற்றிருந்தால்

அவர்கள் பெற்றுள்ள விவசாய கடன் பாதி தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்த தவெக பிறகு அதனை நடைமுறை படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது.

இதனால் விவசாயிகள்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக
திருவெறும்பூரில் அனைத்து கட்சியினரும் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திருவெறும்பூர் அனைத்து பகுதி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் , திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கோரிக்கை முழக்கங்களை கோசமாக எழுப்பி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக வந்து இறுதியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கார்த்திகேயன் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments