திருச்சியில் பொதுகழிப்பறையில் போதை ஊசி செலுத்திகொண்டே இளைஞருக்கு நேர்ந்த துயரம் திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட் அருகே உள்ள கல்மந்தை காலனி பகுதியை சேர்ந்தவர் ரஜமாணிக்கம்(22) கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள பொதுகழிப்பறையில் குப்புற கவிழ்ந்த நிலையில் உயிரிழந்துகிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் அவர் அருகே போதைஊசி கிடந்துள்ளது. ராஜமாணிக்கத்தின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உடலில் போதைஊசி செலுத்திக்கொண்டபொழுது ராஜமாணிக்கம் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அவருக்கு போதைஊசி எங்கிருந்து கிடைத்தது,முதன்முறையாக போதைஊசி செலுத்தி கொள்கிறாரா அல்லது தொடர்ச்சியாக அவர் செலுத்தி கொள்வாரா என்பது குறித்தும், போதை பூசி கும்பலுடன் அவர் தொடர்பில் உள்ளாரா என்றும் போலீசார் தொடர் விசாரணை

மேற்கொண்டுவருகின்றனர். கடந்த ஜூன் 7ம் தேதியன்று அரியமங்கலத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் யாஸ்மின், தன்னுடைய காதலனுடன் மற்றும் நண்பருடன் சேர்ந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கி போதைஊசி செலுத்திக்கொண்ட பொழுது உயிரிழந்த நிலையில், இன்றையதினம் மற்றொரு இளைஞர் போதைஊசியால் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 26 ஆம் தேதி போதை பொருளுக்கு எதிரான தினத்தை கடைபிடிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ள சூழலில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெரும்பாலானவரின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments