Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் உலக சிறுகோள் தின வானியல் பார்வை நிகழ்ச்சி!

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி இயற்பியல் துறை மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மன்றம் இணைந்து, துறையின் வைரவிழா (Diamond Jubilee) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், உலக சிறுகோள் தினத்தை முன்னிட்டும், 29.06.2026 அன்று மாலை 6.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் “One Sky, Endless Discoveries” என்ற தலைப்பில் வானியல் பார்வை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தின.

இந்நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி, நேரு நினைவு கல்லூரி (தன்னாட்சி), இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பி. ரமேஷ் அவர்கள் வழிநடத்தினார். நிகழ்ச்சியின் போது, சிறப்பு சூரிய தொலைநோக்கி (Solar Telescope) மூலம் சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் சூரியப் புள்ளிகளை (Sunspots) மாணவர்கள் நேரடியாகக் கண்டு ரசிக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். நமது அருகிலுள்ள விண்மீனான சூரியனின் அழகையும் அதன் இயங்கும் தன்மையையும் நேரில் உணர்ந்த இந்த அனுபவம் மாணவர்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.

மேலும், 350-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தொலைநோக்கி வாயிலாக நிலா, வெள்ளி (Venus) மற்றும் வியாழன் (Jupiter) ஆகிய விண்பொருட்களை நேரடியாகக் கண்டு இரவு வானின் அற்புதங்களை அனுபவித்தனர். விண்வெளியின் அழகை நேரில் கண்டு ரசித்த இந்த அனுபவம் மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே வானியல் அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி, விண்வெளி அறிவியலின் மீது ஆழ்ந்த ஈடுபாட்டை வளர்க்கும் சிறப்பான அறிவியல் நிகழ்வாக அமைந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *