Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் கையும் களவுமாக கைது!

புகழேந்தி திருச்சி மாவட்ட கல்வி அலுவலராக(இடைநிலை) பணிபுரிந்து
வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருவெறும்பூர் பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக தேவதர்ஷினி பணிபுரிந்து வருகிறார்.

அவரது வருடாந்திர ஊதிய உயர்வு, TET தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான நிலுவை தொகை 2020 ஆண்டிலிருந்து பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு, மேற்படி மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தியை ,தேவதர்ஷினியின் கணவர்,முருகேசன் சந்தித்து கோரிக்கை வைத்தபோது வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க ஏற்பாடு செய்ய ரூ.30,000 – லஞ்சம் கேட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக 30.06.2026ந்தேதி ஆசிரியர் முருகேசன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு
பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 30.06.2026ந்தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல்,
பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகுன், சேவியர்ராணி மற்றும் ஊழல்
தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு

 


நடவடிக்கையின் போது மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி லஞ்சப்பணம் ரூ.30,000/- முருகேசனிடமிருந்து திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சிமாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *