Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லால்குடி இன்னோவா கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு

லால்குடி அருகே சாலை விபத்தில் இருவர் பலிதிருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் ஜங்கமராஜபுரம் வடக்கு தெருவில் வசிக்கும் ரங்கராஜன் மகன் அஜித் 32 இவர் திருச்சி மாம்பழச்சாலையில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

 

வழக்கம்போல் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியின் தங்கை செந்துரையா (25)வுடன் சென்று கொண்டிருந்த பொழுது மேலவாளாடி மேம்பாலம் அருகே சென்ற பொழுது பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட இனோவா கார் பொள்ளாச்சியில் இருந்து லால்குடிக்கு திருமண நிகழ்ச்சிக்காக மணப் பெண்ணை அழைத்து வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் அஜித் மற்றும் அவரது கொழுந்தியா செந்துரையா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்று இருந்த போது இருவரும் உயிர் இழந்தனர்

இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர் உயிரிழந்த இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசும் மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *