முதலமைச்சருடன் நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது – திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி.தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை வழியனுப்பி வைப்பதற்காக திருச்சி விமானயம் வந்தடைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில்

தமிழக முதல்வருடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. முதல்வர் மக்களின் மனதை முழுமையாக வென்றுள்ளார் என்பது, அவர் செல்லும் வழியெங்கும் திரண்டு நின்று மக்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பைப் பார்க்கும்போதே தெளிவாகத் தெரிகிறது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் அவருக்கு எழுச்சியான வரவேற்பை அளித்தனர். உண்மையான மாற்றத்திற்கான சக்தியாக முதல்வர் விஜய் திகழ்கிறார். திருச்சியில் தொடங்கி கரூர் வரை முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது என தெரிவித்தார்.

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments