அனுமானுஷ்ய உருவப் பெண்ணால் தாக்குதலுக்கு உள்ளான இளைஞரால் பரபரப்பு

Jul 4, 2025 - 09:30
Jul 4, 2025 - 10:03
 0  1.7k
அனுமானுஷ்ய உருவப் பெண்ணால் தாக்குதலுக்கு உள்ளான இளைஞரால் பரபரப்பு

சமயபுரம் அருகே கொணலை  என்ற கிராமத்தில் காட்டுப் பகுதியில் பேய் உருவத்தில் ஒரு பெண் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. இந்த பேய் உருவத்தில் சுற்றிவரும் பெண்ணால் தாக்குதலுக்கு உள்ளான வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கொணலை  அருகே மாலை மற்றும் இரவில் வீதி ஓரங்களில் மக்களையும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும்  இந்த உருவம் பின் தொடர்வதாக  தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மாலை நேரத்தில்  அந்தப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள கல்பாளையம் பகுதிகளிலும் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்

 கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் சென்றுள்ளனர்.அப்பொழுது அந்த உருவத்தை சாலையில் பார்த்து மிகவும் அச்சமடைந்துள்ளனர்.இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை அந்த பெண் உருவத்தில் உள்ள அந்த  அனுமானுஷ்ய உருவம் தாக்கியதாக கூறப்படுகிறது

 அந்த தாக்குதலில் காயம் அடைந்த இளைஞரை  உடனடியாக அவரது நண்பர்கள்  தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக   சேர்த்தனர். இன்று வரை அந்த இளைஞர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பகுதியில் வாழும் மக்கள் இதன் காரணமாக மிகுந்த அச்சத்தில் உள்ளனர்

 இது உண்மையா பொய்யா என்ற குழப்பத்திலும் உள்ளனர் இது குறித்து சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது அப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிகழ்வை பற்றி விசாரித்த பொழுது இதற்கு உண்டான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை இது வெறும் புரளி தான் என்று கூறப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 2
Love Love 0
Funny Funny 6
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 1