திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை

திரு.ஜிஎம் ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர்& திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. அஜய் குமார் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் தலைமையில்
இன்று திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர்(=டி.செல்வராஜா, ஏஎஸ்ஐ/சிபிடிஎஸ்/, ஏ.இளையராஜா, HC/CPDS ஸ்ரீ.பி.ராஜ்குமார், HC/CPDS ஸ்ரீ.தண்டபாணி, HC/BDS ஸ்ரீ.இளையராஜா, HC/BDS) ஆகியோருடன், திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேற்படி நடவடிக்கையின் போது திருச்சி பிளாட்ஃபார்ம் எண்.01ல் ஒரு சந்தேகத்திற்கிடமான முறையில் உரிமை கோரப்படாத ஒரு நீல நிற பையை கிடந்தது. அதை சோதனை செய்த போது, ரூ.7680/- மதிப்புள்ள மதுபான கடத்தல் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணை செய்த போது அதனை உரிமைக்கோர எவரும் முன் வரவில்லை.
பின்னர் மேற்கூறிய கடத்தல் மதுபான பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






