இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று 02.07.2025, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர்களது உத்தரவின் பேரில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் த அஜய் குமார் அவர்கள் தலைமையில் திருச்சி, எம்.எம். நகர், UKT மலையில் உள்ள சவுடாம்பிகா வேர்ல்ட் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது அவர்கள் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை பற்றி விளக்கி கூறினர்,
✓ரயில் தண்டவாளத்தை கடக்காதீர்கள் மற்றும் உங்கள் விலைமதிப்பற்ற உயிரை இழக்காதீர்கள்.
✓ரயில்தடங்கள் ரயில்களுக்கு மட்டுமே.
✓ரயிலின் படியில் பயணம் செய்ய வேண்டாம்.
✓ஓடும்/ நகரும் ரயில்களில் நுழையவோ/தடுக்கவோ வேண்டாம்.
✓ ஓடும் ரயில்கள்/ ரயில் பாதைகளுக்கு அருகில் செல்ஃபி எடுக்க வேண்டாம்.
✓ரயில் பாதையில் கல்லை வைக்காதீர்கள், அது ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
✓ரெயில்வே வழியாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் / பட்டாசுகள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.
மேற்கூறிய நடவடிக்கைகளின் தீவிரத்தன்மை மற்றும் விளைவுகள் குறித்து அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும், மேற்கூறிய செயல்களை தடுப்பதற்காக மாணவர்களால் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சுமார் 300 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






