தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஓர் அணி பொதுக்கூட்டம்

திருச்சி 02/07/25 தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஓர அணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் நிகழ்வு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
விளக்க பொது கூட்டம் கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வரவேற்புரை மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன். சிறப்புரை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இப்போது கூட்டத்தில்
சிறப்பு சொற்பொழிவாளர் ஊடகவியலாளர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உரை நிகழ்த்தினார் மற்றும் இக்கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் அண்ணாமலை, மணிராஜ், கதிரவன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் இக்கூட்டத்தில் மாநில மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய நகர்
பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் வட்ட வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் அணிகளின் அனைத்து நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






