பூச்சிமருந்தை குடித்த கூலி பரிதாபமாக உயிரிழந்தார்

திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலையரசன் (58)கூலி வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் கலையரசனுக்கு திருமணமாகாமல் தனது தாய் அலமேலுடன் வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி எல்லைக்குடி செல்லும் சாலையில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
அதனைப் பார்த்தவர்கள் கலையரசனை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சையில்
இருந்த கலையரசன் சிகிச்சைக்கி பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






