திருவெறும்பூர் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது

திருவெறும்பூர் அருகே கஞ்சா விற்ற இரண்டு பேரை திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று மஞ்ச திடல் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பித்து செல்ல முயன்று உள்ளனர்.
அப்போது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்து விசாரித்த பொழுது புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி வடக்கு தெருவை சேர்ந்த மன்சூர் (19), புதுக்கோட்டை சுண்ணாம்பு கார தெருவைசேர்ந்து விஸ்வநாத் (24)என்பது தெரியவந்தது மேலும் அவர்களிடம் சோதனை செய்த
போது10 கிராம் எடை கொண்ட 10 கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






