இந்தியாவில் இருந்து ரூ50ஆயிரம் கோடி அளவுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி - மத்திய மந்திரி எல் முருகன்

இந்தியாவிலேயே முதல்முறையாக முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார் புரத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார். சிடிஏ ஜெயசீலன் தலைமை தாங்கினார். இம்முகாமில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 6ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் எல் முருகன் பேசும்போது பல்லாண்டுகளாக ஓய்வூதியம் பெற முடியாதவர்களும் நேரடியாக இங்கு வந்து உரிய தீர்வு காண உள்ளனர். இந்த முகாமிற்கு வர முடியாதவர்களுக்கு உதவிடும் வகையில் ஐந்து நடமாடும் வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐந்து வாகனங்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று ஓய்வூதியதாரர்களின் குறைகளை கண்டறிந்து உரிய தீர்வை பெற முடியும். இந்த முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான ஓய்வுதாரர்களுக்கு 1.5 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த ஓய்வூதிய வழங்கப்பட்டது
இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்பதற்காக பொதுமக்களை தேடி இந்த வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு நமக்கான ஆயுத தளவாடங்களை நாமே தயாரித்துக் கொள்ள முடிகிறது.
காரிடார் உத்தர பிரதேசத்திலும் இரண்டாவது தமிழகத்தில் திருச்சி கோயம்புத்தூரில் டிபன்ஸ் காரிடார் உருவாக்கப்படுகிறது. ஏறத்தாழ ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2014ம் ஆண்டு முன்பு இறக்குமதி மட்டும் இருந்தது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம்.. பல்வேறு நாட்களாக விடுக்கப்பட்ட கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஊதியம் திட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.
முப்படைகளுக்குமான முதன்மை அதிகாரி பதவி உருவாக்கப்பட்டது. நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டுதோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது. நம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது என கூறினார்.
முக்கிய விருந்தினர்களாக டாக்டர் மயங்க் சர்மா, IDAS, பாதுகாப்பு கணக்குகள் துறை இயக்குநர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், PVSM, AVSM, தெற்குப் பிராந்திய தலைமைச் செயலாளர் மற்றும் டி. ஜெயசீலன், IDAS, சென்னையின் பாதுகாப்பு கணக்காளர் ஆகியோர் பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






