மாயமான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாயின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

Jun 29, 2025 - 10:39
Jun 29, 2025 - 10:43
 0  627
மாயமான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாயின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

திருவெறும்பூர் அருகே மாயமான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாயின் உடலை அழுகிய நிலையில் நவல்பட்டு போலீசார் மீட்பு.திருவெறும்பூர் அருகே உள்ள மாணிக்க நகரை சேர்ந்தவர் ரஞ்சன் (55) இவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் தற்பொழுது எஸ்பிஐ வங்கியில் பாதுகாவலர் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது தாய் சரஸ்வதி (70)இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 23ம் தேதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றுள்ளார்.

அப்படிச் சென்ற சரஸ்வதி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.இது குறித்து பல இடங்களில் தேடியும் சரஸ்வதி கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து ரஞ்சன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சரஸ்வதியை தேடி வந்த நிலையில் மாணிக்க நகர் எதிரே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள மரத்தில் சரஸ்வதி தூக்கில் தொங்கிய நிலையில்

 இருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு உடனடியாக சரஸ்வதியின் உடலை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய...

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 1