கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தவர் மீது குண்டர் சட்டம்

திருவெறும்பூர் உட்கோட்டம். நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 06.06.2025-ம் தேதி நின்றுகொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம். இலுப்பூர். ராப்பூசலை சேர்ந்த ரமேஷ்
என்பவரிடம், த பொன்மலை காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடியான ஜெய் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்
ஜெய் என்பவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப. அவர்கள் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 49 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது
What's Your Reaction?






