திருச்சி முக்கொம்புவில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 5ஆயிரம் கன அடி நீர் திறப்பு - எச்சரிக்கை

கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது இதை அடுத்து மேட்டூர் அணையும் நிரம்பிவிட்டது.
தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து 50 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. தற்பொழுது முக்கொம்பிவிற்கு 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 25 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 5000 கன அடி
நீரும் திறந்து விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் நேற்றே கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு, ஆற்றில் சலவை தொழில் ஈடுபடுபவர்கள்,
கால்நடை மேய்ச்சலில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை மேலும் கூடுதலாக கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படும் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






