அபராதம் வசூலிக்கும் போலீசாரைப் பார்த்து பதட்டமடைந்த வாகன ஓட்டி- இருசக்கர வாகனத்துடன் பேருந்துக்குள் சிக்கி விபத்து

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே சற்று நேரத்துக்கு முன்னதாக போக்குவரத்து காவல்துறையினர் சாலை விதிமீறல்கள் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் வசூலித்துக் கொண்டிருந்தனர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மளிகை கடை வைத்து
நடத்தி வருபவர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் வந்து கொண்டிருந்தார் தலைக்கவசத்தை வாகனத்தில் வைத்து தலையில் அணியாமல் கூட்டி வந்தார் போலீசார் அபராதம் விதிப்பதை பார்த்து பதட்டம் அடைந்த பொழுது முன்னே சென்ற அரசு பேருந்து திடீரெனபிரேக் பிடித்ததால் இருசக்கர வாகனத்தை கட்டுப்பாடு இழந்து பின்னே ஒரு காரும் வந்து இவர் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இரு சக்கர வாகனம் பேருந்துக்கு அடியில்
சென்றது இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக இவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக காருக்குள் இருந்தவர்களுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை ஏர்பேக் திறந்துவிட்டது. அப்பகுதியில் உள்ளவர்கள் போலீசார் சாலை விதிகளை கடைபிடிக்காமல்
செல்பவர்கள் பிடித்து அபராதம் வசூல் செய்வதை அகண்ட சாலையில் ஓரமாக நின்று பணியாற்றினால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தவிர்க்க முடியும் என வேண்டுகோள் விடுத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






