முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு-இளைஞருக்கு போலீசார் வலை வீச்சு

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு-இளைஞருக்கு போலீசார் வலை வீச்சுதிருச்சி மாவட்டம், குணசீலத்தை சேர்ந்த சத்தியநாராயணன் (50). இவர் குணசீலம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர்.
இவர் சொந்த வேலை காரணமாக நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் - திருச்சி சாலையில் கிளியநல்லூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் சத்தியநாராயணனை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.
உடனே சுதாரித்துக்கொண்ட அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இருப்பினும் அவரை விரட்டி சென்ற அந்த இளைஞர் சத்தியநாராயணனின் காலில் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த சத்தியநாராயணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக
சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டிய இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






