மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூபாய் 5000 மானியம்- மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மாவட்ட மீன்வளர்ப்பு விவசாயிகள் / மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு ஒரு ஹெக்டேர் பரப்பளவு மீன் பண்ணைக்கு 10000 எண்ணம் மீன்குஞ்சுகள் வீதம் ரூ.5000/- மானியம் என்ற அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 20 ஹெக்டேருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.5000/- வீதம் 10000 எண்ணம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் என்ற விகிதத்தில் மானியம் வழங்கப்படவுள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கு மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள விவசாயிகள் பயனடைய கீழ்க்காணும் முகவரியில் இயங்கி வரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை / மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கூடுதல் விவரம் பெற்று விண்ணப்பம் சமர்ப்பித்திட வேண்டும்.
உறுப்பினர் செயலர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை/உதவி இயக்குநர் அலுவலம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் தரை தளம் கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் 620 023 தொலைபேசி எண். 0431 2421173
இத்தகவலை திருச்சிராப்பள்ளி வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






