DGP சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்பபடுவார்களா?அல்லது தப்பி ஓட முயற்சி என்று ஏதாவது நல்ல செய்தி வருமா?? - திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்

DGP சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்பபடுவார்களா? அல்லது தப்பி ஓட முயற்சி என்று ஏதாவது நல்ல செய்தி வருமா??
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோயில் காவலாளி, இளைஞர், 27 வயதே ஆன அஜித் குமார் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததிருப்பது மிக மிகக் கண்டனத்துக்கு உரியது. காவல்துறை என்கிற பெயரில் மனித மிருகங்களாக மாறி அஜித் குமாரை கொடூரமாக தாக்கிக் கொன்றிருக்கிறார்கள். ஒரு திருட்டு வழக்கை இப்படி தான் விசாரிக்க வேண்டுமா? மனித உயிரின் மீது அக்கறை இல்லாத, குரூரபுத்தி கொண்ட தமிழக காவல்துறையை சேர்ந்த இவர்களைக் கைது செய்து உத்தரவிட்டிருக்கிறது அரசு.
கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணை என்கிற பெயரில் கழிவறையில் வழுக்கி விழுவார்களா? அல்லது தப்பி ஓடினார்கள் என்று சொல்லி என்கவுண்டர் செய்யப்படுவார்களா? சாமானியனுக்கு ஒரு நியாயம் காவல்துறைக்கு ஒரு நியாயமா?
எப்படி பார்த்தாலும் விசாரணை என்கிற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தி ஒரு மனித உயிரை எடுத்த இவர்களுக்கு எந்த கட்டத்திலும் மன்னிப்பு கிடைக்கக் கூடாது. காவல்துறை அஜித்குமாரை தாக்கும் அந்த வீடியோ காட்சியைப் பார்த்தால் திருட்டு வழக்கிற்கு இப்படிதான் நடவடிக்கை எடுக்குமா காவல்துறை என்கிற ரீதியில் ரத்தம் உறைந்து போகிறது.
காவல்துறையினர் மீது FIR பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்குப் பாராட்டுக்கள். கட்சியில் யாரும் தவறு செய்தால் பல வருடம் நமக்காக உழைத்த கட்சியினர் என்று பாராமல் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் காவல்துறை மீது மட்டும் ஏன் இந்த மெண்மை போக்கு? இவர்கள் உடனடியாகக் கட்டாயம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். இந்த மிருகங்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
DGP சார், இந்த காவலர்கள் எந்த கழிவறை வழுக்குமோ அங்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும் அல்லது எங்கு தப்பித்து செல்ல வசதியாக இருக்குமோ அங்கு சென்று விசாரிக்கபடவேண்டும். என்று திருச்சி கிழக்குத் தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்பதிவு தற்போது அவர் சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






