கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது.
காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தினை பொருத்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதனால், கரையோர மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ. கால்நடைகளை கொள்ளிடம் ஆற்றில் ஒட்டிச்செல்லவோ வேண்டாம்
எனவும். சலவை தொழிலாளர்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
What's Your Reaction?






