கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த ஐந்து பேர் கைது

திருவெறும்பூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம், மது பான பாட்டில்கள், இரு சக்கரம் வாகனம் ஆகியவற்றை பறித்துச் சென்ற ஐந்து பேரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை குங்குமபுரத்தை சேர்ந்தவர் சண்முகம் (39) இவர் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தேவராயன் ஏரி குறுக்கு சாலை அருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த வாழவந்தான் கோட்டை பெரியார்
நகரை சேர்ந்த ராகுல் (20), வாழவந்தான் கோட்டை திடீர்நகரை சேர்ந்த ஆரோக்கிய நிக்கோலஸ் (26)வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த வாசுதேவன் (21), துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமேஷ் (22), வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த ரவிக்குமார் ( 22 ) ஆகிய ஐந்து பேரும் சண்முகத்தை கத்தியை காட்டி மிரட்டி ரூ 400 பணம், 2 மதுபான பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சண்முகம் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆரோக்கிய நிக்கோலஸ் மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது அதேபோல் ராகுல் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.குறிப்பிடத்தக்கது
What's Your Reaction?






