வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் நேரில் ஆய்வு

வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், பி.கே.அகரம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய். 2.40 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியிளையினையும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 3.10 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூபாய். 4.32 இலட்சம் மதிப்பீட்டில் ஊர் ஏரி வரத்து வாரி வாய்க்கால் அகலப்படுத்தி தூர்வாரும் பணி மேற்கொள்வதையும், ரெட்டிமாங்குடி ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 18 இலட்சம் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடத்தினையும், ரெட்டிமாங்குடி
ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூபாய் 17.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 240 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியினையினையும், பெருவனப்பூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி
திட்டத்தின் கீழ் ரூபாய் 6.70 இலட்சம் மதிப் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நல்ல முத்து ஏரி வரத்து வாரி வாய்க்கால் அகலப்படுத்தும் பணியினையும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூபாய் 3.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதையும், முதலமைச்சரின் வீடு மறுசீரமைப்பு திட்டம் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதையும், பெருவளப்பூர் முதல்
சிறுகளப்பூர் வரை முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலை மேம்பாட்டுப் பணிகளையும், காணக்கிளியநல்லூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 240 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியினையினையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 6
இலட்சம் மதிப்பீட்டில் குடி ஏரி வரத்து வாரி வாய்க்கால் அகலப்படுத்தி தூர்வாரும் பணியினையும், மேலரசூர் ஊராட் ஊராட்சியில் முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 213 கோடி மதிப்பீட்டில் மேலரசூர் முதல் வரகுப்பை வரையிலான சாலை பலப்படுத்துதல் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 18.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1 வகுப்பறை பள்ளிக்கூடத்தின் கட்டுமானப் பணிகளையும், கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், பி.கே.அகரம் ரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 4.96 இலட்சம் மதிப்பீட்டில் வனத்துறையுடன் இணைந்து நாற்றாங்கள் உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றினை நட்டு வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காணக்கிளியநல்லூர் மற்றும் வரக்குப்பை ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் 342 வீடுகள் கட்டப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில், வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கங்காதாரிணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






