எஸ் ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்கவிழா

திருச்சிராப்பள்ளி.எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் 2025- 2026 ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இராமாபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி எஸ் ஆர்எம்.கல்வி
குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவகுமார் அவர்களின் அறிவுரையின் படி 02.07.2025 அன்று காலை 10.30 மணியளவில் எஸ்.ஆர்.எம் கலையரங்கில் நடைபெற்றது.திருச்சி எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் புலமுதன்மையர் முனைவர் டி. பிரான்சிஸ் சேவியர் கிறிஸ்டோபரி வரவேற்புரை வழங்கினார்
இவ்விழாவிற்கு திருச்சி மற்றும் இராமபுரம் எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமத்தின் மாணவர் சேர்க்கை குழு இயக்குனர் முனைவர் கே.கதிரவன் தலைமை ஏற்று மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றினார்.
இவ்விழாவில் கார் டெக்னாலஜி குளோபல் டேலண்ட் தலைவர் திரு ஆர் கே ராமச்சந்திரன் சிறப்புலிருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.அவர்தம் உரையில் மாணவர்கள் வாழ்க்கையில் வடிவமைத்துக் கொள்ளவேண்டிய முறைகள் பற்றியும் கல்வி கற்கும் போதே தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் மாணவர்களுக்கு பல்வேறுதுறைகளில் உள்ள வாய்ப்பையும் எடுத்துக் கூறினார்.
இவ்விழாவில் புலமுதன்மையர்கள் முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் எஸ்.ஆர்.எம். உணவு மற்றும் மேலாண்மையில் கல்வி நிறுவன முதல்வர் முனைவர் சாந்தனு தாஸ் குப்தா தன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.
What's Your Reaction?






