மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி

Jul 1, 2025 - 20:26
Jul 1, 2025 - 20:30
 0  11
மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக 01.07.2025 அன்று காலை 10 மணியளவில் FH மினி ஹால் பீமநகரில் திருச்சி மாவட்ட பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், சமுதாய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மமக துணை பொதுச்செயலாளர் தஞ்சை IM. பாதுஷா தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், ஜமாத்துல் உலமா மாநில துணை தலைவர் மீரான் மிஸ்பஹி, ஜமாத்துல் உலமா மாவட்ட செயலாளர் இனாமுல் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினர் அ.பைஸ் அகமது MC அனைவரையும் வரவேற்றார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்கள், ஜமாத் உலமா சபை தலைவர் மௌலானா ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்கள், மாவட்ட அரசு டவுன் காஜி ஹாஜி ஜலீல் சுல்தான் அலீம் மன்பஈ அவர்கள், மமக பொதுசெயலாளர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் ப. அப்துல் சமது MLA, மஹல்லா மஸ்ஜித் ஜமாத் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சமுதாய கவிஞர் சையது ஜாபர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள்,

சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மதுரையில் ஜுலை 06 அன்று நடைபெறும் இரட்டை கோரிக்கை எழுச்சி பேரணி மாநாட்டில் பெரும் திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா நன்றி கூறினார்.மமக மாவட்ட நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட துணை நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0