தண்ணீர் அமைப்பு சார்பில் சர்வதேச பிளாஸ்டிக் பை விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் என்பது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 3ம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீங்கான பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நிலையான மாற்றுகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.இதனை முன்னிட்டு,
பொது மக்களாகிய நாம் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களை தவிர்க்குமாறும், அதற்குண்டான மாற்று பொருட்களை பயன்படுத்தியும் நெகிழி பைகளுக்கு பதிலாக நமது பாரம்பரிய வழக்கமான துணி பைகளை பயன்படுத்து வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்வு தண்ணீர் அமைப்பு சார்பாக செயல் தலைவர் கே.சி. நீலமேகம், செயலாளர்
கி.சதீஸ்குமார், துணை செயலாளர் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கர், வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, கவிஞர் கோவிந்தசாமி, நன்மாறன், அருணாச்சலம் மற்றும் கோவிந்தம்மாள் தமிழ் மன்ற நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






