பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு-மாவட்ட ஆட்சித்தலைவர்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் நெல் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக ஜூன்-12ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
விவசாய பயிர்கள் சாகுபடியில் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், அதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க ஏதுவாக பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்டு வருகிறது.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) காரீப் பருவத்தில் ஷீமா இன்சூரன்ஸ் கம்பெனி (KGIC) என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது.
தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குறுவைநெல், நிலக்கடலை, சோளம், பருத்தி பயிர்கள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வருவாய் கிராம அளவில் குறுவை நெல் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.770/-ஐ 31.07.2025 தேதிக்குள்ளும், பிரகா அளவில் நிலக்கடலை பிரீமியத் தொகையாக
ஏக்கர் ஒன்றுக்கு ரூ.664/-ஐ 16.09.2025 தேதிக்குள்ளும், சோளம் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.313/-ஐ 16.09.2025 தேதிக்குள்ளும் மற்றும் பருத்தி பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.525/-ஐ 30.08.2025 தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது...
எனவே காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ, அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ, (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள 'விவசாயிகள் கார்னரில்"
www.pmfby.gov.in
நேரிடையாகவோ, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல்/இ-அடங்கல்/விதைப்பு சான்றிதழ்
அல்லது உதவி வேளாண் அலுவலர் வழங்கும் (Digital Crop Certificate) டிஜிட்டல் பயிர் சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் (Bank pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை(Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்)/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு விவசாய பெருங்குடி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமால் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






