உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்

Jul 3, 2025 - 23:41
Jul 3, 2025 - 23:47
 0  4
உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்

 வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவையில் வெளியிடப்பட்ட 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டம் செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.

மக்கள் நலமும், நல்வாழ்வும் அவர்கள் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகிறது. உடல் நலம் பேண, ஊட்டச்சத்து மிக்க உணவினை உரிய அளவில் உட்கொள்வது இன்றியமையாததாகும். ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் பெறும் பங்காற்றுகின்றன. ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யவும். உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம்

 செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.07.2025 அன்று காலை 10.30 மணியளவில் துவங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் துவங்கப்பட்டு, பயறு வகைகள் விதை தொகுப்பு, காய்கறிகள் விதைத் தொகுப்பு மற்றும்

 பழச்செடிகள் தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0