மாணவர்களுக்கான"தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்"

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் ஜூலை இரண்டாவது வாரத்தில் (09.07.2025 முதல் 15.07.2025 வரை) "தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்" கொண்டாடுதல் தொடர்பாக தேதி வாரியாக நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடத்தப்படவுள்ளன.
09.07.2025 அன்று திருச்சிராப்பள்ளி-17, புத்தூர் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 10.07.2025 அன்று திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 11.07.2025 அன்று பொறியியல் கல்லூரியில்
பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 14.07.2025 அன்று முற்பகல் திருச்சி, தேசிய கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 14.07.2025 அன்று பிற்பகல் திருச்சிராப்பள்ளி துவாக்குடியில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது.
15.07.2025 அன்று உலக இளைஞர் திறன் நாளாக கொண்டாடப்பட்டு மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டிகள் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி/ அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இத்தகவலை திருச்சிராப்பள்ளி திரு.வே.சரவணன் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






