தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் ஒருநாள் அம்மன் கோவில்கள் சுற்றுலா - சுற்றுலாத்துறை அமைச்சர்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோவில்கள் சுற்றுலா 18.07.2025 முதல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது - சுற்றுலாத்துறை அமைச்சர்
திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் தகவல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆன்மீக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில்
திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடிஅம்மன் தொகுப்பு சுற்றுலா 18.07.2025 அன்று முதல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுகிறது. ஆடி அம்மன் சுற்றுலா திருச்சி ஓட்டல் தமிழ்நாடு, MC டொனால்ட் சாலை, திருச்சியிலிருந்து அருள்மிகு
வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில், உறையூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோவில், திருவானைக்காவல் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் -அருள்மிகு உஜ்ஜயினி மாகாளி அம்மன் திருக்கோவில், சமயபுரம் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோவில், சிறுவாச்சூர் அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோவில், பொன்மலை அருள்மிகு உக்கிர காளியம்மன்
திருக்கோவில், திருச்சி ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1100/-- இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், ஆன்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட இந்த சுற்றுலாக்களுக்கு www.ttdconline.com
என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111, 9176995862, 0431-2414346, என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் வாட்ஸ் அப் எண்.7550063121.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






