வழிப்பறி மற்றும் குட்கா வழக்கு- மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் உட்கோட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லாச்சிபுரம் பறவைகள் சரணாலயம் அருகில் கடந்த 08.06.2025-ம் தேதி அவினாசிபாளையத்திலிருந்து திருச்சி உறையூருக்கு சிக்கன் லோடு ஏற்றி வந்த திருப்பூர் மாவட்டம்
பல்லடம், அம்மன் நகரை சேர்ந்த சௌந்தர்ராஜ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் முகில்குமார்,இந்திரா மணிகண்டன்,ஆட்டோ பாலு, ரபிக், குடமுருட்ட கேசவன் மணிகண்டம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஜெய்சங்கர் ஆகியோர் கத்தி மற்றும் அருவாளை காட்டி மிரட்டி வழப்பறி செய்த குற்றத்திற்காக ஜீயபுரம் காவல் காவல் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 15.06.2025 அன்று சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்ட குபேரன் நகர். அரியாவுர் ஆறு அருகில் சட்ட விரோதமாக 318 கிலோ புகையிலை மற்றம் குட்கா பொருட்களை தனது குடோனில் பதுக்கி வைத்த குற்றத்திற்காக ஆனந்த் ராம் சோமரசம்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர்கள் அனைவரின் மீதும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 03.07.2025-ஆம் தேதி சிறையில் உள்ள மேற்கூறிய அனைத்து எதிரிகளுக்கும் சார்வு செய்யப்பட்டது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போது மொத்தம் 56 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டதுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






