நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

Jul 3, 2025 - 16:33
Jul 3, 2025 - 16:35
 0  177
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அடையாறு, சாஸ்திரி நகர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் இன்று (03.07.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர் சோழராஜபுரம் நகர் நல மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி. மதுபாலன் இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். 

இந்நிகழ்வில் த மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஹேமசந்த் காந்தி, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0