திருச்சி - தஞ்சை அணுகுசாலை அமைப்பதற்காக கலந்தாலோசனைக் கூட்டம்- துரை வைகோ

Jul 4, 2025 - 16:12
Jul 4, 2025 - 16:15
 0  331
திருச்சி - தஞ்சை அணுகுசாலை அமைப்பதற்காக  கலந்தாலோசனைக் கூட்டம்- துரை வைகோ

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி - தஞ்சை சாலையில், பால்பண்ணை முதல் துவாக்குடி வரை இருபுறமும் அணுகுசாலை (Service Road) அமைக்க வேண்டுமென 16 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பினர் விடுத்துவரும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, அப்பகுதியை விபத்தில்லாத பகுதியாக மாற்றுவதற்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.

இதுதொடர்பாக, கடந்த ஜூன் 29, 2025 அன்று சென்னையில், தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும், முதல்வரின் முதல் நிலைச் செயலர் மருத்துவர் பி. உமாநாத், இ.ஆ.ப. அவர்களையும் சந்தித்து, அணுகுசாலை அமைப்பது குறித்த நீதிமன்றத் தீர்ப்புரை மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணிகள் குறித்து விவாதித்து, தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து, கடந்த மே 19, 2025 அன்று எனது திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பினருடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அணுகுசாலை அமைக்கும் பணிகளை தொடங்கிட வலியுறுத்தும் நோக்கில், நேற்று (03.07.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, இப்பணிகளை விரைவாக முடிக்க என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என உறுதியளித்தேன். மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன் இ.ஆ.ப., திருச்சி மாநகராட்சி ஆணையர் திரு. லி. மதுபாலன் இ.ஆ.ப., மண்டலக் குழு தலைவர் திரு. மு. மதிவாணன் எம்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறை பொது மேலாளர் (தொழில்நுட்பம்) மற்றும் திட்ட இயக்குனர் திரு. செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள், பால்பண்ணை அணுகுசாலை மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார் 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 2