நகை மாயத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு எழுத்தாளர் மீது பழி சுமத்தி நெருக்கடி கொடுத்த அதிகாரிகள் -தற்கொலை

Jul 4, 2025 - 21:18
Jul 4, 2025 - 22:16
 0  394
நகை மாயத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு எழுத்தாளர் மீது பழி சுமத்தி நெருக்கடி கொடுத்த அதிகாரிகள் -தற்கொலை

திருவெறும்பூர் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகளில் முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில் முதுநிலை எழுத்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் விவசாயிகளுக்கு தேவையான வட்டி இல்லா பயிர் கடன், உரம் மற்றும் நுண்ணுட்ட பொருட்கள் வழங்கப்படுவதுடன் விவசாய நகை கடன் விவசாய தளவாட பொருட்கள் வாங்குவதற்கான கடன் மற்றும் ஆடு, மாடு வாங்குவதற்கும் மற்றும் சுய உதவிகளுக்கான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த கடன் சங்கத்தில் செயலாளராக பத்மாவதி என்பவர் முதுநிலை எழுத்தாளராக சாமிநாதனும் ஊழியராக ராமதாஸ் மற்றும் நகை மதிப்பீட்டாளராக கிருத்திகாவும் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் அந்த கடன் சங்கத்தின் நகை அடகு வைத்தவர்களின் நகைகளின் சிலரது நகைகள் காணாமல் போய் இருப்பதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இணை பதிவாளருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள் தமிழ்ச்செல்வன் கபிலன் ஆகியோர் கணக்குகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர்.

இதில் முறைகேடு நடந்துஉள்ளது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதனை சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நகை அடகு வைத்த நகை உரிமையாளர்களிடம் அதற்குரிய இழப்பீடுகளை செலுத்தி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் அரசங்குடியை சேர்ந்த முதுநிலை எழுத்தாளரான சுவாமிநாதன் (59) என்பவர் கல்லணை அருகே உள்ள கலவை மேடு பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தோகூர் போலீசருக்கு இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் சுவாமிநாதனின் உறவினர்கள் சாமிநாதன் தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்றும் அவர் வேலை பார்த்து வந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை அடகு வைத்தவர்களின் நகைகளை அங்கு உள்ளவர்கள் எடுத்து கையாடல் செய்துள்ளனர்.கடந்த 30ஆம் தேதி அடகு வைத்த ஒருவர் நகையை மீட்க வந்தபோது அவரது நகையில் ஒரு நகை இல்லாதது தெரிய வந்தது என்றும் அதன் மதிப்பு இரண்டு பவுன் என்றும் அன்று செயலர் பத்மாவதி

 விடுமுறையில் இருந்ததாகவும் இந்த நிலையில் இது சம்பந்தமாக சாமிநாதன் பத்மாவதிக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் எவ்வளவு குறைகிறதோ உங்களிடம் இருந்தால் போட்டுக் கொடுத்து விடுங்கள் பிறகு இது சம்பந்தமாக புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என கூறியதாகவும் .அதன் அடிப்படையில் சாமிநாதன் தனது வீட்டில் இருந்து இரண்டு பவுன் நகையை கொண்டு வந்து கொடுத்து சரி செய்ததாகவும் .

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து புகார் கூட்டுறவு இணை பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளருக்கு சென்றதாகவும் அதன் அடிப்படையில் விசாரணையை மாவட்டதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் மேற்கொண்டு வந்ததாகவும் இந்த நிலையில் பத்மாவதி தொடர்ந்து விடுப்பிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் அந்த வங்கியில் முறைகேடு நடந்துள்ளது சம்பந்தமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள் ஆய்வு செய்தபோது மேலும் எட்டு பேருக்கு சொந்தமான நகைகள் மாயமாய் உள்ளதாகவும் இதில் 108 கிராம் குறைவதாக கூறி அந்த நகையை உடனடியாக சுவாமி நாதனை கட்ட சொல்லி அவர்கள் மிரட்டியதாகவும் சாமிநாதன் இன்னும் மூன்று மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் தன் மீது பழி சுமத்தை வேறு வழியின்றி 105 கிராம் நகையை கொடுத்து உள்ளார்.

இந்நிலையில் மேலும் 200 கிராம் நகை குறைகிறது என்றும் அதனால் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவரும் தலா நாலரை லட்சம் விதம்தங்களது சொந்த பணத்தை நகை உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என கூறியதாகவும் அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை செய்து பணம் வழங்கப்பட்டதாகவும் இந்த நிலையில் இன்று காலை சாமிநாதன் மீண்டும் அலுவலகம் சென்ற பொழுது சாமிநாதனிடம் மேலும் 7 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த சாமிநாதன் தொடர்ந்து தன்னை மட்டுமே குற்றம் சாட்டி வருகிறார்கள் இது சம்பந்தமாக தனக்கு இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை

இந்த நிலையில் தான் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் இதுபோல் அவ பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக தான் தங்களது சொந்தமான நகைகளை கொடுத்ததாகவும் ஆனால் தொடர்ந்துதன்னிடமிருந்து அதிக அளவில் பணத்தை பெற முயற்சிக்கிறார்கள் என்றும் மேலும் இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை வைத்து எடுக்கும் அறைக்கு சாமிநாதன் பத்மாவதி மற்றும் கிருத்திகா ஆகிய மூன்று பேரிடமும் தலா ஒரு சாவி இருக்கும் என்றும் அப்படி இருக்கும் பொழுது தன்னை மட்டும் எப்படி இவர்கள் குற்றம் சாட்டி வஞ்சிக்கின்றனர் எனக் கூறி மனம் வருந்தியததாகவும் இந்த நிலையில் வங்கியில் இருந்து வீட்டிற்கு வந்தவர் அதன் பிறகு எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது இந்த நிலையில் அவர் கல்லணை அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்து நாங்கள் இங்கு வந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுவதுடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பக் கூடாது என்றும் அதனால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதற்கிடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சாமிநாதனின் சட்டை பையில் இருந்து 22-500 ரூபாய் தாள்களும் மற்றும் 500 ரூபாய் சில்லறை தாள் என மொத்தம் 11 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் மற்றும் அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் இருந்து இதை தோகூர் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் தூக்கிட்டு தொங்கிய இடத்தில் அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர் இச்சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0