திருச்சி அரசு பள்ளிகளில் செயல்பாட்டிற்கு வந்தது "வாட்டர் பெல்" திட்டம்

Jul 4, 2025 - 23:03
Jul 4, 2025 - 23:09
 0  28
திருச்சி அரசு பள்ளிகளில் செயல்பாட்டிற்கு வந்தது  "வாட்டர் பெல்" திட்டம்

பள்ளி மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கவும் , நீர் சத்து குறைபாட்டால் கற்றல் திறன் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும்  உடல் நலனுக்காக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு பள்ளிகளிலும் "வாட்டர் பெல்" என்கிற திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக "வாட்டர்" பெல் செயல்முறை திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் செயல்பாட்டிற்கு வந்தது. அதன்படி காலை 11. 15 மணி, நண்பகல் ஒரு மணி, மதியம் மூன்று மணி ஆகிய மூன்று வேலைகளில் வாட்டர் பெல்லிற்கான மணி ஒலித்தது அந்த மணி ஒலித்தபின் மாணவ மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து தண்ணீர் அருந்தினார்கள். 

இந்தத் திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசிற்கு மாணவ , மாணவிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.மேலும் மாணவ மாணவர்களின் நளனில் அக்கறை கொண்டு தமிழக அரசின் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் வரவேற்கின்றனர் .

மேலும் "வாட்டர் பெல்" திட்டம் அனைத்து பள்ளிகளிலும் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா எனவும் சு சுத்தமான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறுகிறதா என சுகாதார ஆய்வாளர்கள் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர் .அதே போல சுகாதார ஆய்வாளர்கள் மாணவர்களிடம் தண்ணீர் குடிப்பதன் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் .  

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0