திருச்சி மாவட்டத்தில் ஜனவரி முதல் தற்போதுவரை மொத்தம் 57 தடுப்பு காவல் ஆணை- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி

திருச்சிராப்பள்ளி மாவட்டம். வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருவம்பட்டி பாலகட்டை அருகே கடந்த 21.06.2025-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிறுகாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமேஷ் மகன் அன்பழகன் என்பவரை, சுனைபுகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி வடிவேல் (வயது 31) என்பவர் வழி மறித்து
வேண்டுமென்றே அன்பழகனிடம் பிரச்சனை செய்தும், மிரட்டியும் அவரிடமிருந்த ரூ. 650/-பணத்தினை பறித்து சென்றது தொடர்பாக பாதிக்கப்பட்ட அன்பழகன் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வாத்தலை காவல் நிலையத்தில் வடிவேல் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சிறையில் இருந்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி வடிவேல் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 04.07.2025-ஆம் தேதி சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 57 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






