அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவர் செஸ் போட்டியில் தேசிய அளவில் முதலிடம்

கடந்த ஜூன் மாதம் 25 லிருந்து 28ஆம் தேதி வரை ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய செஸ் போட்டியில் திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் R.அஸ்வின்
தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவர் அடுத்து நடைபெறவுள்ள சர்வதேச செஸ் போட்டியில் பங்குதேர்வாகியுள்ளார் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரை கௌரவிக்கும் விதமாக நாளை காலைஒன்பது முப்பது மணி அளவில் பள்ளி வளாகத்தில் முன்னாள் சங்கம் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்று ரஹ்மத்துல்லா முன்னாள் மாணவர் சங்க தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






