சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில்-மென் திறன்கள்"உயரங்களை நோக்கி" -சிறப்பு நிகழ்வு

மென் திறன்கள்: உயரங்களை நோக்கி'காக்னிசன்ஸ் கிளப்', இயற்பியல் துறை, சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 14.07.2025 அன்று "மென் திறன்கள்: உயரங்களை நோக்கி " என்ற சிறப்பு நிகழ்வை நடத்தியது.
முனைவர். வி. எல். ஜெயபால், ஆங்கிலத் துறை இணைப்பேராசிரியர், செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சிரப்பள்ளி அவர்கள் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.முனைவர். அ. க. அனிதா, இணைப்பேராசிரியர், இயற்பியல் துறை, சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
முனைவர் வி. எல். ஜெயபால் அவர்கள் இந்த சிறப்புரையில், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் மென் திறன்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மாணவர்கள் மனோதத்துவ தடைகளை எவ்வாறு எதிர்க்கொள்ளலாம் என்பதை விளக்கினார். அவரது ஊக்கமளிக்கும் உரை, மாணவர்களின் பயத்தை தவிர்த்து, அவர்களது திறன்களை உணர உதவியது.மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், உரையாளர் வழங்கிய செயல்முறை எடுத்துக்காட்டுகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
நிகழ்வின் நன்றி உரையை முனைவர். சு. கார்த்திகா, உதவி பேராசிரியர், இயற்பியல் துறை, சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி அவர்கள் வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






