பயன்பாட்டிற்கு வரும் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் -பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுமதிக்க சுற்றறிக்கை

நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் -பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுமதிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை
பஞ்சப்பூர் பேருந்து நிலைத்திருந்து நாளை முதல் பேருந்துகள் இயங்கவுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்தால் அவர்களை அனுமதிக்குமாறு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்... பஞ்சபூர் பேருந்து நிலையம் நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் முதல் நாள் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.இயல்புநிலை திரும்ப சிறிது நேரம் எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
எனவே பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர்கள் இது தொடர்பான முறையான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு தெரிவிக்குமாறு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






