16/07/2025 ஆம் தேதி பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்- அமைச்சர் கே.என்.நேரு

வரும் 16 ஆம் தேதி முதல் திருச்சி பஞ்சப்பூரில் மாநகர ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 09 ஆம் தேதி திறந்து வைத்தார்.
அத்துடன், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இந்த பேருந்து முனையம் ஒரு நாளைக்கு சுமார் 3,200 பேருந்துகளை கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்தின் உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,வரும் 16 ஆம் தேதி முதல் திருச்சி பஞ்சப்பூரில் மாநகர ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் முழுவீச்சில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது என நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சியில் தெரிவித்தார்.
கரூர் பெரம்பலூர் அரியலூர் பேருந்துக்கள் வழக்கம் போல திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்படும்.புதிய பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வந்த பின்னரும் கூட, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம் ஆகிய பேருந்து நிலையங்கள் வழக்கம் போல இயக்கும்.புதிய பேருந்து முனையத்தில் இருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவருவதற்கு தேவையான நகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






