இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் துரை வைகோவுடன் சந்திப்பு

சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை கடந்த ஆறு மாதங்களாக வழங்கப்படாததோடு, ஒன்றிய அரசு இதுவரை வழங்கி வந்த உதவித் தொகைக்கான நிதியினையும் பெருமளவில் குறைத்துள்ளது. ஆகவே சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் எனவும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் இன்று என்னை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அவர்களிடம் நிகழ்கால அரசியலின் போக்கு மற்றும் தேவை, இளைஞர்கள் அரசியலில் எப்படி பங்களிக்க வேண்டும், சாதி மத உணர்வுகளை தூக்கி எறிந்துவிட்டு கல்வியின் மூலம் உயர்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
திருச்சி தொகுதியின் வளர்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நான் அற்றி வருகின்ற பணிகளையும், தொடர் முயற்சிகளையும் அவர்களிடம் எடுத்துக்கூறி உங்களுக்கு விருப்பம் இருந்தால் அரசியல் கடந்து தன்னார்வலர்களாக என்னோடு கரம் கோருங்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வாருங்கள். என்னோடு இணைந்து உங்களின் பங்களிப்பையும் பொதுமக்களுக்கு இதன்மூலம் தர இயலும் என தெரிவித்தேன்.
ஆர்வமுடன் கேட்டுக் கொண்ட தோழர்களின் கோரிக்கையையும் அவசியம் பரிசீலிப்பதாக அவர்களிடம் தெரிவித்தேன். என்று திரை வைகோ அவர்கள் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






