Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தி.மு.க மரியாதை பெரும்பிடுகு முத்தரையர் 1,351வது பிறந்தநாள்

திருச்சி பாரதிதாசன் சாலை, ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1,351-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

தி.மு.க மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் சல்மா, முக்கிய நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜ்,ந. செந்தில் ஆகியோர் முன்னிலையில் பேரரசரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இவ்விழாவில் பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், பாபு, ராஜ்முஹம்மது, விஜயகுமார், மணிவேல், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், மாவட்ட – மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க கழகத் தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *