அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாநகர் உறுப்பினருமான ப.செந்தில்நாதன் தனது அனைத்து கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1996ஆம் ஆண்டு அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்து, பின்னர் அமமுகவில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு பொறுப்புகளில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தையும், தனிப்பட்ட தொழிலையும் புறக்கணித்து முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டதாகவும், 2022 மாநகராட்சி தேர்தலில் அமமுக சார்பில் திருச்சியின் ஒரே மாநகர் உறுப்பினராக வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி வேட்பாளராக போட்டியிட்டதைத் தொடர்ந்து தனது மாநகர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சியில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நிகழ்வுகள் மற்றும் கூட்டணி தர்மம் மீறப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக நிர்வாகிகளுக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும், “பகையாளிகள் பங்காளிகளாக மாறியதால்” தங்களைப் போன்ற நிர்வாகிகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை கட்சியை விட்டு விலகாமல் பணியாற்றியதாக கூறியுள்ள அவர், தற்போது தனது ராஜினாமா யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற தெளிவுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்கத்திற்காக பல இழப்புகளை தாங்கி பணியாற்றிய நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட அவமானகரமான சூழ்நிலைகளால், அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இறுதியாக, தன்னுடன் பணியாற்றிய நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ள செந்தில்நாதன், “மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்” என்ற வரிகளுடன் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments