திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதியாக இருப்பவர் சாந்தி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் சக்தி சர்வீஸ் (வயது 7). எடமமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார். நீதிபதியின் மகனுக்கு மணப்பாறை கல்வி மாவட்ட அலுவலர் இலவச சீருடை, பாடநூல் ஆகியவற்றை வழங்கினார்.
நீதிபதி தனது மகனை இந்த பள்ளியில் சேர்த்தது பெருமை அளிக்கிறது. இதுபோல் மற்ற அரசு உயர் அதிகாரிகளும் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என்று பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments