திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று 05.05.2026 அன்று பெய்த மழையின் அளவு குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 28.23 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மொத்தம் 677.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் அதிகமழை:
திருவெறும்பூர் வட்டத்தில் உள்ள துவாக்குடி IMTI நிலையத்தில் 64.2 மி.மீ மழை பதிவாகி மாவட்டத்தில் அதிகபட்சமாக உள்ளது.
அடுத்ததாக திருச்சி கிழக்கு வட்டத்தில் கோல்டன் ராக் பகுதியில் 98 மி.மீ மற்றும் TRP Ap பகுதியில் 93.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
திருச்சி மேற்கு வட்டத்தில் ட்ரிச்சி ஜங்ஷன் பகுதியில் 81 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

வட்டார வாரியான நிலவரம்
துறையூர் வட்டம் தென்பரணாடு 51 மி.மீ,துறையூர் 4 மி.மீ Association 3மி.மீ,மணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் 46.2 மி.மீ, வாதலை அணைக்கட்டு 25.2 மி.மீ, தேவிமங்கலம் 20.4 மி.மீ, சிறுகுடி 20.2 மி.மீ
ஸ்ரீரங்கம் வட்டம்: நாவலூர் குட்டப்பட்டு 27.4 மி.மீ,லால்குடி வட்டம் லால்குடி 26.6 மி.மீ, கல்லக்குடி 20.4 மி.மீ,புல்லம்பாடி 14.2 மி.மீ, நந்தியார் ஹெட் 10.2 மி.மீ

மழை இல்லாத பகுதிகள்:
மணப்பாறை, மருங்காபுரி, முசிறி ஆகிய வட்டங்களில் உள்ள மழைமானி நிலையங்களில் மழைப்பொழிவு 0 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் வாய்பு உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments