திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் தொகுதிகளின் இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மையத்திலும், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளின் இயந்திரங்கள் புலிவலம் ஒயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மத்திய பாதுகாப்புப் படை, காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். 288 சிசிடிவி கேமராக்களுடன் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 18,59,016 வாக்குகள் பதிவாகி, 86.58 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக 27 சுற்றுகளிலும் குறைந்தபட்சமாக 20 சுற்றுகளிலும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுகளின் விவரம்:
திருச்சி மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு சுற்று விவரம்
ஸ்ரீரங்கம் : 27 சுற்று ,திருச்சி கிழக்கு : 22 சுற்று,திருச்சி மேற்கு : 22 சுற்று,திருவரம்பூர் : 23 சுற்று
மணப்பாறை : 25 சுற்று,லால்குடி : 20 சுற்று,மண்ணச்சநல்லூர் : 22 சுற்று,துறையூர் : 22 சுற்று
,முசிறி : 21 சுற்றுக்களாக நடைபெற உள்ளது..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments